search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை"

    சிவகிரி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    சிவகிரி:

    ராயகிரி - வாசுதேவ நல்லூர் இடையே கூடநல்லூர் மலையின் மீது பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. கோவிலின் முன் பகுதியில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர் உண்டியலின் பணம் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று கோவிலை திறப்பதற்காக அர்ச்சகர் வந்தார். அப்போது கோவில் முன்புள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் கோவில் நிர்வாக அலுவலர் தங்கபாண்டியனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் இது குறுத்து வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கோவிலின் வெளிப்புறம் உள்ள சி.சி.டி.வி. காமிரா மற்றும் அவசர கால ஒலி எழுப்பும் அலாரம் ஆகியவைகளும் உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை. எனினும் சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர் உண்டியலில் இருந்து நிர்வாகம் சார்பாக பணம் எடுக்காததால் அதிக அளவில் பணம் இருக்கும் என தெரிகிறது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரிய வடவாடி உள்ளது. இங்கு நடுகாட்டு அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமிதரிசனம் செய்வதுவழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் காணிக்கை பணத்தை உண்டியலில் செலுத்தினர்.

    இந்த கோவிலில் பூசாரிகளாக முத்து, குமார் ஆகியோர் இருந்து வந்தனர். நேற்று இரவு பூஜை முடிந்ததும் இருவரும் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் கோவிலின் சுற்றுசுவரை ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். 
    அவர்கள் கோவிலின் முன்பு இருந்த 5 அடி உயரம் உள்ள இரும்பு உண்டியலை வெல்டிங் மிஷன்மூலம் துளைபோட்டனர். பின்னர் அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை பூசாரி குமார் வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறித்து அவர் மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உண்டியலில் இருந்த ரூ.2 லட்சம் காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலின் முன்பு மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

    விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தடயங்களை பதிவு செய்தனர். உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே இந்த கோவிலில் 3 முறை உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
    ×